இன்றைய சிந்தனை

"இலட்சிய வேகத்தோடு திரும்பத் திரும்ப எண்ணிய எண்ணம் புறவுலகில் ஒரு நாள் நிச்சயம் நிறைவேறும்"
Latest Post

கிழக்கில் உதயமாகியுள்ள வாசம் உதவும் உறவுகள் அமைப்பு

Written By Vinayagamoorthy Visayarajah on Wednesday, October 7, 2015 | 6:57 AM

கிழக்கில் உதயமாகியுள்ள வாசம் உதவும் உறவுகள் அமைப்பு மிகவும் வறுமைக்கோட்டில் வாழும் குடும்பங்களை இனங்கண்டு வாழ்வாதாரம் மற்றும் கல்வி போன்றவற்றிக்கு மனித நேய உதவிகளை செய்து வருகின்றது அந்த அடிப்படையில் அண்மையில் கோப்பாவெளி மற்றும் ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமங்களில்  கணவனை இழந்து
பெண்களை தலைமைதுவங்களாக குடும்ப பொறுப்பை ஏற்று வாழ்ந்துகொண்டு  இருக்கும் குடும்பங்களுக்கான உதவிகளை வாசம் உதவும் உறவுகள் அமைப்பு மிகவும் மனித நேயத்துடன் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவ குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கான கல்விக்குமான உதவிகளை அண்மையில் வாசம் உதவும் உறவுகள் அமைப்பினால் வழங்கி வைக்கபட்டுள்ளது .இவ் உதவியானது அவர்களின் சுய தொழிலை  ஊக்கப்படுத்தும் முகமாக கால்நடை வளர்ப்புக்காய் ஆடு ,,மற்றும் தையல் இயந்திரத்தையும் அமையில் வாசம் உதவும் உறவுகள் அமைப்பால் வழங்கபட்டுள்ளது.
இதன் ஊடாக எமது புலம் பெயர்ந்து வாழும் எம் தாயக உறவுகளுடன்
மிகவும் பணிவுடன் ஒரு பணிவான வேண்டுகோளை வைக்கவும் விரும்புகிறோம்,உங்களால் முடிந்தளவு  எமது உறவுகளுக்காக எவையேனும் உதவ முன் வர வேண்டும்..வாசம் உதவும்  உறவுகள்
அமைப்பின்  உண்மைத்தன்மை ,,நேர்மையை நன்கு உணர்ந்ததும் எம் உறவுகளுக்காக  என்பதையும் மிகவும் அன்புடன் வேண்டுகின்றோம்.

செங்­க­லடி குமா­ர­வே­லியார் கிராமம் ஸ்ரீ செல்­வ­வி­நா­யகர் ஆலய மகா கும்­பா­பி­ஷேகம்

Written By Sabesh on Wednesday, August 26, 2015 | 8:50 PMமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கல்­குடா தொகு­தியில் செங்­க­லடி பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்­பட்­டதும் திரு­மலை வீதியில் இருந்து இரு­நூறு யார் தூரத்தில் அமைந்­துள்ள கிராமம் குமா­ர­வே­லியார் கிராமம் ஆகும். பழம் பெரும் கிரா­ம­மான சேனைக்­கு­டி­யி­லிருந்து ஐம்­பது யார் தூரத்தில் இக்­கி­ராமம் இருக்­கின்­றது. 1977ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியில் கல்­குடா தொகு­தியில் வெற்­றி­யீட்­டிய அமரர் கே.டபி­ள்யூ.தேவ­நாயகத்தினால் குடி­யேற்றம் செய்­யப்­பட்ட கிரா­மமே குமா­ர­வே­லியார் கிராமம். இக் கிரா­மத்தில் குடி­யே­றி­ய­வர்கள் யாவரும் ஏறாவூர் 5ஆம் குறிச்­சியில் வாழ்ந்­த­வர்­களும், சேனைக்­கு­டி­யி­ருப்பில் குடி­யி­ருந்­த­வர்­களும் இட­வ­ச­தி­யின்­மையால் குமா­ர­வே­லியார் கிரா­மத்­திற்குள் உள்­வாங்­கப்­பட்­டனர்.

பழைய எம்.பி.க்களை தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்கு தீவி­ர­மாக செயற்­பட்டார் தமி­ழ­ரசுக் கட்சி செய­லாளர் முன்னாள் எம்.பி. செல்­வ­ராசா குற்­றச்­சாட்டு

பொதுத்­தேர்­த­லின்­போது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் ஐந்­து­ பேருக்கும் ஆத­ர­வாக வேலை செய்­கின்றேன் என்று வெளிப்­ப­டை­யாக காட்­டிக்­கொண்­டாலும் உள்­ளூர பழைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கக்­கூ­டாது என்­பதில் மிக அக்­க­றை­யாக இருந்­த­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன்.செல்­வ­ராசா குற்­றஞ்­சாட்­டினார்.

யுத்த குற்றச்சாட்டுக்கள் பொய்யென நிரூபிப்பதற்கு வடக்கு, கிழக்கு மக்களே ஒரே சாட்சியாகும் இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா கூறுகிறார்

இலங்கை இரா­ணு­வத்தின் மீதான யுத்த குற்­றச்­சாட்­டுகள் சர்­வ­தேச மட்­டத்தில் பல­ம­டைந்து வரு­கின்­றதை நாம் நன்கு அறிவோம். எனினும் எம்­மீ­தான போர்க் குற்­றச்­சாட்­டு­களை பொய்­யென நிரூபிப்பதற்கு எமக்கு வடக்கு, கிழக்கு மக்­க­ளே­ ஒரே சாட்சியாகும் என இரா­ணுவத் தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் கிரி­ஷாந்த டி சில்வா தெரி­வித்தார். 
 
இம்­முறை நடை­பெறும் சர்­வ­தேச பாது­காப்பு மாநாட்டின் பின்னர் இரா­ணு­வத்தின் மீது எழுப்­பப்­படும் பல கேள்­வி­க­ளுக்கு விடை கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
இரா­ணு­வத்­தினால் நேற்று கொழும்பில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அமைச்சரவை செப். 2இல் பதவிப் பிரமாணம் ஐ.தே.க. தவிசாளர் மலிக் சமரவிக்கிரம

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியும் இணைந்து அமைக்­க­வுள்ள தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் இரண்டாம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் பத­வி­யேற்­க­வுள்­ளது. இந்த தக­வலை ஐக்­கிய தேசிய கட்­சியின் தவி­சாளர் மலிக் சம­ர­விக்கி­ரம உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா பிரேரணை ஐ.நா.வின் 30 ஆவது கூட்டத்தொடரில் கொண்டுவர நடவடிக்கை


ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கைக்கு ஆத­ர­வாக பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்கு அமெ­ரிக்கா தீர்­மா­னித்­துள் ­ளது.
 
அதா­வது மனித உரிமை விவ­கா­ ரங்­களில் முன்­னேற்­றத்தை வெளிக் ­காட்டும் நோக்கில் உள்ளக விசா­ர ணைப் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்கு இலங்­கைக்கு போதிய கால அவ­காசம் ஒன்றை வழங்­க­வேண்டும் என்ற நோக்கில் இந்த பிரே­ர­ணையை கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும்

Written By Vinayagamoorthy Visayarajah on Friday, August 7, 2015 | 3:53 AM


பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதால் சகல கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரசாரப் பலகைகள் யாவும் 15ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

தேர்தல் மாவட்டத்திற்காக நிறுவப் பட்ட முடிந்த ஒரேயோரு மத்திய அலுவலகத்தில் மாத்திரம் கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் சின்னத்துடன் கூடிய பிரசார பலகை காட்சிப்படுத்த முடியும். வேட்பாளர்களின் இலக்கங்களுடன் கூடிய சகல பிரசாரங்களும் 15ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னர் நீக்கப்பட வேண்டும்.

பிரசாரப் பலகைகள் அகற்றப்படுவதுடன் மாத்திரமன்றி அன்றையதினம் நள்ளிரவுமுதல் அவ்வாறான காரியாலயங்களில் கட்சியை அல்லது வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையிலான எந்தவிதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படக் கூடாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதனை மீறும் வகையிலான பிரசாரங்கள் அகற்றப்படுவதுடன், அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.